கிளியூர் கிளி அம்மன் மற்றும் அய்யனார் கோவில் திருவிழா, ஊரணி பொங்கல் விழா
ADDED :1151 days ago
உளுந்தூர்பேட்டை: கிளியூர் கிளி அம்மன் மற்றும் அய்யனார் கோவில் திருவிழா, ஊரணி பொங்கல் விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தில் கிளி அம்மன் மற்றும் அய்யனார் கோவில் திருவிழா, ஊரணி பொங்கல் விழா நடந்தது. அதனையொட்டி கடந்த 6ம் தேதி காப்பக் கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. நேற்று கிளியூர் ஊராட்சியில் உள்ள துணை கிராமமான ரகுநாதபுரம் கிராமத்தில் இருந்து தாய் வீடு என்ற முறையில் குதிரை உள்ளிட்ட பரிவாரங்களுடன் சென்று சுவாமியை வழிபட்டனர். நேற்று மாலை கிளியூர், ரகுநாதபுரம் கிராம மக்கள் ஊரணி பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.