பாலமேடு பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1203 days ago
பாலமேடு: பாலமேடு அருகே சேந்தமங்கலத்தில் பொதியகிழவர் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட பொதி அழகர், பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொதிய கிழவன் பங்காளிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.