திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உழவாரப்பணி
ADDED :1121 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. இரு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இதில் 52 பக்தர்கள் பங்கேற்று கோயில் உட்புற வளாகப் பகுதியை துாய்மைப்படுத்தினர். படிக்கட்டுகள், துாண்கள், கொடிமரம், 63 நாயன்மார்கள் பீடம், நவகிரகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நீர் கொண்டு சுத்தம் செய்தனர். வழிபாட்டிற்கு வந்த பக்தர்களும் இப்பணியில் இணைந்து செயல்பட்டனர். உழவாரப்பணி எற்பாடுகளை திண்டுக்கல் கிரிவலக்குழுவினர்,திண்டுக்கல் மலைக்கோட்டை ஸ்ரீஅபிராமி அம்மன் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்பு பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்.இதில் தலைவர் மதன் வெங்கடேசன், செயலாளர் சரவணன், பொருளாளர் கோவிந்தராஜ் , டிரஸ்டி கணேசன் பங்கேற்றனர்.