உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம்

பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம்

பாலமேடு: பாலமேடு அருகே சேந்தமங்கலத்தில் பொதி அழகர், பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. ஏற்பாடுகளை பொதிய கிழவன் பங்காளிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.பேரையூர்: செம்பரணி வாலகுருநாதன், அங்காளஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நிர்வாக கமிட்டி தலைவர் திருமுருகன் தலைமையிலும்செயலாளர் மோகன்குமார், பாலமுருகன், வெங்கடேஷ்குமார் பூசாரிகள் பெரியசாமி, சந்திரன் முன்னிலையில் நடந்தது. குருவாயூர் மேல் சாந்தி நம்பூதிரி குழுவின் சார்பில் மூன்று நாளாக பூஜை நடந்தன. 18 கிராம பங்காளிகள் மற்றும் சாமியாடிகள், கோடாங்கிகள் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !