உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் பாலாலயம்

கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் பாலாலயம்

கீழக்கரை: கீழக்கரை இந்து பஜாரில் உள்ள உக்கிர வீரமா காளியம்மன் பழமையும் பிரதான சிறப்பையும் பெற்ற கோயில் ஆகும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, கோயில் திருப்பணிகளுக்காக பாலாலய சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்கள் விநாயகர், உக்கிர வீரமாகாளியம்மன், பைரவர், ஐயப்பன், பேச்சியம்மன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் சவுந்திரராஜன், தட்சிணாமூர்த்தி, வியாகுராகவன் ஆகியோர் செய்திருந்தனர். உத்தரகோசமங்கை பாலசுப்பிரமணியம் குருக்கள் தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !