அரியமங்கலத்தில் தர்ம முனிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1194 days ago
பெருநாழி: பெருநாழி அருகே அரியமங்கலத்தில் தர்ம முனிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த செப்., 13 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பகவத் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, பூர்ணாகுதி, எந்திர பிரதிஷ்டை உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜைக்கு பின்பு, காலை 11 மணியளவில் தர்ம முனீஸ்வரர், அரியநாச்சி அம்மன், இருளப்ப சுவாமி, காளியம்மன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அரியமங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.