ரெகுநாதபுரத்தில் விஸ்வகர்மா பிரம்ம ஜெயந்தி விழா
ADDED :1130 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் உள்ள ஏகாம்பர சிவன் கோயில் வளாகத்தில் விஸ்வகர்மா விழா கமிட்டி சார்பில் 4ம் ஆண்டு பிரம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நேற்று காலை 8;30 மணியளவில் விஸ்வ பிரம்மா சுப்ரபாதமும் அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, புண்ணியாவஜனம், கணபதி, சுதர்சன, மகாலட்சுமி, நவகிரக ஹோமம், ஏகாம்பர சிவனுக்கு மூல மந்திரமும் விஸ்வ பிரம்ம யாக வேள்வியும் பூர்ணகுதியும் நடந்தது. விஸ்வபிரம்மாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமுதாயத் தலைவர் மங்களநாதன், சங்கத் தலைவர் ராஜேந்திரன், நேதாஜி, வரதராஜன், தர்மராஜன், ஈஸ்வரன், விஜி, புவனேஸ்வரன் மற்றும் ரெகுநாதபுரம் விஸ்வகர்மா விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.