தொட்டப்பநாயக்கனூரில் உழவாரப்பணி
ADDED :1189 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் பழமையான பாண்டியர்கள் கால சிவாலயம் உள்ளது. சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி சன்னதிகளாக கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் வழிபாடு, பராமரிப்பு இல்லாமல் மேல் தளம் இடிந்து மரம், செடி கொடி முளைத்து பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தை மதுரை காகபுஜண்டர் உழவாரப் பணிக்குழுவினர் மரங்களை அகற்றி இடிந்து விழுந்த கருங்கற்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி தலைவர் பாலமுருகமகாராஜா மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.