ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1186 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பரமக்குடி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் புரட்டாசி மாத முதல் தேதி முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. குருநாதர்கள் திருமால், கிருஷ்ணன், குழு தலைவர் குருசாமி தலைமை வகித்தனர். காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி, சிறப்புபூஜைகள் நடந்தது. பின்பு படிபூஜை, பஜனைகள் நடந்தது. முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று முதுகுளத்தூர், கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத சிறப்புபூஜை நடந்தது.