உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலசெங்குடி பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில், ஒன்பதாம் நாள் மண்டல பூஜை வழிபாடு மற்றும் புரட்டாசி முதல் நாள் வழிபாட்டை  முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, நடைபெற்ற தீப  ஆராதனையில், மண்டல பூஜை, ஒன்பதாம் நாள் உபயதாரர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் போஸ்,  செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !