திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபாடு
ADDED :1118 days ago
திருவண்ணாமலை: புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மற்றும் வேணுகோபால சுவாமி சன்னதிகளில், சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேசமயம் அதிகாலை முதலே, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று வழிபட்டனர். மாடவீதி பூதநாராயணன் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.