தட்சணகாசி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :1118 days ago
தர்மபுரி: புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தட்சணகாசி கால பைரவர் கோவிலில், பல்வேறு யாகங்கள், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.