உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர்  கோயிலில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள்  உண்டியலில் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணி நேற்று புதன்கிழமை (21.9.22) காலை முதல் மாலை வரை கோயில் ஊழியர்களால் கணக்கிடப்பட்டது. அதில் 2 கோடியே 7 லட்சத்து 13 ஆயிரத்து 581 ரொக்க பணமாகவும் 85 கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ 450 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் இருந்ததாக காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு தெரியப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !