செங்கல் சிவபார்வதி கோவில் நவராத்திரி விழா
ADDED :1222 days ago
களியக்காவிளை: செங்கல் சிவபார்வதி கோவிலில் நவராத்திரி விழா செப்.,26ம் தேதி துவங்குகிறது. களியக்காவிளை அருகே உதயன்குளம்கரை செங்கலில் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 111.2 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைந்து உள்ளது. இதனால் இந்த கோவில் தென் கைலாயம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நவராத்திரியை ஒட்டி விழா நடத்தப்படுகிறது. இவ்வருடம் நவராத்திரி விழா செப்.,26ம் தேதி துவங்கி அக்.,5-ம் தேதி வரை தொடர்ந் து 10 நாட்கள் நடக்கிறது. கோவில் வளாகத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் கொலு பொம்மைகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, செங்கல், மகேஸ்வரம் சிவபார்வதி கோவில் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி தலைமையில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.