ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயிலில் நவராத்திரி விழா வரும் 26ல் துவக்கம்
மதுரை : மதுரை, ஒத்தக்கடை, யோக நரசிம்மர் கோயிலில் நவராத்திரி விழா வரும் 26ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமி தாயார், வரத நரசிம்மர், விஷ்ணு துரக்கை ஆகிய பெருமாள்களுக்கு நவராத்திரி உற்சவம் வழக்கம் போல் சன்னிதிகளில் நடைபெறுகிறது.
26ம் தேதி முதல் 5ம் தேதி வரை.. தினமும் காலை 10.00 மணி்க்கு மகாஸங்கல்பம், திருமஞ்சனம். 12.00 மணிக்கு திருவாராதனம், சாற்று முறை கோஷ்டி உபயதாரர் மரியாதை நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு பெருமாள் கொலுவுக்கு திருவாராதனம், சாற்று முறை கோஷ்டி உபயதாரர் மரியாதை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் செய்தது. இந்த டிரஸ்ட் மூலம் தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்திற்கு பக்தர்கள் நன்கொடை அளித்து உதவலாம்.
தொடர்புக்கு: 98420 24866, 87780 34151