சன்மார்க்க சங்கத்தில் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :1215 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சமரச சுத்தசன்மார்க்க சங்கத்தில், வள்ளலாரின் பாடல்கள் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. பொள்ளாச்சி காந்தி மண்டபம் வீதியில், சமரச சுத்த சன்மார்க்க சங்கம் உள்ளது. இங்கு மாதந்தோறும், பூசத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.கடந்த, 18ம் தேதி முதல், வள்ளலார் இயற்றிய, ஆறாயிரம் பாடல்கள் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று, காலை, 7:00 மணி முதல் மாலை வரை பாடல்களை பாடி வள்ளலார் பெருமானை வழிபாடு செய்கின்றனர். சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.