புரட்டாசி ஸ்தல யாத்திரை
ADDED :1168 days ago
வடமதுரை: எரியோடு திருஅருள் பேரவை சார்பில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பல்வேறு கோயில்களுக்கு ஆன்மிக ஸ்தல யாத்திரை சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது 34ம் ஆண்டாக முதல் வார பயணமாக தென்னம்பட்டி ஆதிநாதபெருமாள் கோயிலும் ஆன்மிக ஸ்தல யாத்திரை சென்றனர். அங்கு திருஅருள் பேரவை தொண்டர்கள் பஜனை, பக்தி இன்னிசை, சொற்பொழிவும், நாமாவளிப் பாராயணம், தியானம் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். திருஅருள் பேரவை தலைவர் என்.ராமகிருஷ்ணன், செயலாளர் எம்.பழனிச்சாமி பொருளாளர் மாரிமுத்து, துணை செயலாளர்கள் தங்கவேல், நவநீதபாலகிருஷ்ணன். துணைத்தலைவர்கள் சுந்தரராஜ், பி.பழனிச்சாமி பங்கேற்றனர்.