சத்தியமங்கலத்தில் மஹாளய அமாவாசை : தர்ப்பண பூஜை
ADDED :1221 days ago
ஈரோடு : சத்தியமங்கலத்தில் மஹாளய பட்சம் அமாவாசையையொட்டி தர்ப்பணப்பூஜை நடைபெற்றது. திரளானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய அமாவாசை என்பதாலும்,சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளான நேற்று ஸ்ரீஐயப்பன் பொற்கோவில் சேவா அறக்கட்டளை சார்பில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. காலை 6.00மணி முதல் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சத்தியமங்கலம்,கோபி,மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்,மற்றும் பசுக்களுக்கு அகத்திகீரை கொடுத்து வழிபட்டனர்.