ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED :1122 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் 18ம் ஆண்டு நவராத்திரி உற்ஸவ விழா துவங்கியது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நிறைவேற்றப்பட்டது.
வல்லபை ஐயப்பன் சன்னிதானம் அருகே உள்ள மஞ்சமாதா அம்மனுக்கு காப்புக் கட்டு நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் தினசரி தொடர்ந்து பத்து நாட்களும் வல்லபை மஞ்சமாதா பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வல்லபை கொலு மண்டபத்தில் பள்ளி மாணவர்களின் நடனம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்டவைகள் நடக்கிறது. நிறைவு நாளில் மஞ்சமாதா அம்மனின் பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்க உள்ளது. வருகிற செப்.,30 அன்று சுமங்கலி பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் மற்றும் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளை செய்திருந்தனர்.