கருமாரியம்மன் கோயிலில் பறவை காவடி பூக்குழி இறங்கிய பக்தர்கள்
கமுதி: கமுதி அருகே அபிராமம் கருமாரியம்மன் கோயில் 10ம் ஆண்டு புரட்டாசி முளைப்பாரி, பூச்சொரிதல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர் . கடந்த ஒருவாரத்திற்கு ஊர் வளைந்து காப்பு கட்டப்பட்டது.கருமாரி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தது.அபிராமம் விநாயகர் கோயிலில் பக்தர்கள் சக்தி கரகம், அக்கினிசட்டி, பால்குடம், பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்பு கருமாரியம்மன் கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் பலகாரம் சுட்டு கையில் எடுத்தார். பின்பு மூலவரான கருமாரியம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 33 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது .இதற்கான ஏற்பாடுகளை கருமாரியம்மன் கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தனர்.