கிச்சனில் நடக்கும் தவம்
ADDED :4856 days ago
தவசி என்னும் வடசொல்லுக்கு தவமுனிவர் என பொருள். தவம் செய்தவர்க்கு உடம்பில் கனல் உண்டாகும். அதன் மூலம் அவர் தன்னுடைய ஆன்மாவை பக்குவமாக்குகிறார். சமையல்காரர் பச்சையாக இருக்கும் பொருட்களை பக்குவமாக சமைத்து அளிக்கிறார். இரண்டிலும் பக்குவமாக்கும் பணி தான் நடக்கிறது. அன்றாடம் நம் வீட்டில் நடக்கும் சமையலும் ஒரு தவப்பணி தான். சற்று கவனம் பிசகினாலும் ருசி போய் விடும். கோபத்துடன் சமைத்தால், அதை உண்பவர்க்கும் கோபம் வரும். நல்ல எண்ணங்களுடன் சமைத்தால் உடலுக்கு நல்லது. உண்ணும் உணவு தான் ஒருவரின் மன உணர்வாக மாறுகிறது. அதனால், சமைக்கும் நேரமெல்லாம் தவம் செய்யும் நேரம் தான். இதனால் தான், திருநெல்வேலி பகுதியில் சமையல்காரரை தவசிப்பிள்ளை என்பர்.