உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்மன்கள் தசரா விழாவில் பக்தர்கள் தரிசனம்

அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்மன்கள் தசரா விழாவில் பக்தர்கள் தரிசனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தசரா விழா நடந்து வருகிறது. சின்னநத்தம், மேட்டுத்தெரு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், பல கோவில்களின் அம்மன்கள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பலவிதமான அம்மன்களுக்கு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, மூகாம்பிகை மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அண்ணா சாலை பகுதியில் உள்ள கோவில்களில், நேற்று முன்தினம் இரவு, பல்வேறு வடிவில் அம்மன்கள் எழுந்தருளினர்.பொதுமக்கள் பொழுபோக்கிற்காக, விளையாட்டு ராட்டினம், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழாவையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !