உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் காளி கோயில் காணிக்கை சேலைகள் ஏலம் விடப்படாமல், விற்பனை என புகார்

மடப்புரம் காளி கோயில் காணிக்கை சேலைகள் ஏலம் விடப்படாமல், விற்பனை என புகார்

திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை சேலைகளை ஏலம் விடப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பலரும் பட்டு சேலை, பட்டு துண்டு உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்குவார்கள், அதனை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு கோயில் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும், விற்பனையாகாத சேலைகளை மொத்தமாக வியாபாரிகளிடம் ஒரு துண்டு (உருப்படி) கணக்கில் விற்பனை செய்யப்படும். நேற்று விற்பனையாகாத சேலைகளை மூட்டைகளாக கட்டி வியாபாரிகளுக்கு அதிகாரிகள் விற்பனை செய்தனர். அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் கூறும்போது : லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சேலைகளை முறைகேடாக விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து லாரியில் ஏற்றப்பட்ட சேலைகள் மீண்டும் கோயில் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: விற்பனையாகாத கழிவு சேலைகள், துண்டுகள் மொத்தமாக விற்பனை செய்வது வழக்கம், நீண்ட நாட்கள் விற்பனை செய்யாததால், அதிகமாக தேங்கி சேதமடைந்தது. எனவே வியாபாரிகளுக்கு விற்பனை செய்தோம், பிரச்சனை ஏற்பட்டதால் மீண்டும் கோயில் கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !