உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருப்பதியில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள்

தென் திருப்பதியில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள்

மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் விழாவில், மாணவிகளின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சிறுமுகை அடுத்த, ஜடையம்பாளையம் ஊராட்சி, தென் திருமலையில் தென் திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். சிறப்பு பூஜை செய்த பின்பு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் மாணவிகளின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !