உலக மக்கள் நலன் வேண்டி பிரித்திங்கரா யாகம்
ADDED :1173 days ago
மேட்டுப்பாளையம்: உலக மக்கள் நலன் வேண்டி மகா பிரித்திங்கரா தேவி யாகம் நடந்தது. மூலிகை பொருட்களுடன், 50 கிலோ மிளகாய் போட்டு யாகம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் ராஜீவ் நகரில் ராஜ கணபதி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. உலக மக்கள் நலன் வேண்டி நவராத்திரி துர்காஷ்டமி மகா பிரத்திங்கரா ஹோமம் நடந்தது. இதில் மூலிகை பொருட்கள் போட்டு யாக வேள்வி செய்தனர். இறுதியில், 50 கிலோ மிளகாய், மிளகு போட்டு யாக வேள்வியில் நடத்தினர். சேலம் சிவ ஸ்ரீ பூபதி சிவாச்சாரியார் மற்றும் கண்ணன், சிவம் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.