அருணாசலேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்
ADDED :1195 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் திருக்கல்யாண மண்டபத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை என்னும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.