ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவம்!
ADDED :4807 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 41வது பிரம்மோற்சவ விழா நேற்று முன் தினம் துவங்கியது. நேற்று காலை துவஜாரோஹணம், இரவு கமல வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை தினமும் காலை திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடக்கிறன. பிரம்மோற்சவ விழாவில், வரும் 24ம் தேதி கருட சேவையும், 25ம் தேதி அனுமந்த சேவை நடக்கிறது. 29ம் தேதி காலை 10 மணிக்கு ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர் வீதியுலா நடக்கிறது.