உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி தென் கைலாயமாக பெயர் பெற்று சிறந்து விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (4.10.2022) அன்று சாஸ்திர பூர்வமாக பக்தி சிரத்தையுடன் கோயிலில் ஆயுத பூஜை நடத்தப்பட்டது .கோயில் துணை நிர்வாக அதிகாரி என்.ஆர். கிருஷ்ணா ரெட்டி தலைமையில் இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டது .ஒவ்வொரு ஆண்டும் கோயில் வளாகத்தில் உள்ள ஆகாச விநாயகர் சன்னதி அருகிலுள்ள நித்ய கல்யாண உற்சவம் மண்டபத்தில் ஆயுத பூஜை நடத்துவது வழக்கம் இதே போல் நேற்று இங்கு கோயிலில் பூஜைகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள், பூஜை சாமான்கள், மேலும் உச்சமூர்த்திகளுக்கு பயன்படுத்தும் அனைத்து பூஜை பொருட்களை ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஹோமங்கள் வளர்த்து  கோயில் வேத பண்டிதர்கள் சம்பிரதாய முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டது .தசரா நவராத்திரி விழாவில் ஆயுத பூஜையை கோயிலில் சிறப்பாக நடத்துவது வழக்கம் . இந்நிலையில் இந்த பூஜைக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு. தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் ,கோயில் அதிகாரிகள் ,கோயில் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் அபிஷேக குருக்கள் ஆன நிரஞ்சன் குருக்கள் ஆயுத பூஜையை நடத்தினர் .மேலும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் அலங்கார  கவசத்திற்கு சுவாமி வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழுக்கப்பட்டு சுவாமிநாத குருக்கள்  பூஜைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடத்தினர்.இந் நிகழ்ச்சியில் கோயில் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அபிஷேக குழுக்கள் உட்பட கோயில் அதிகாரிகள் ,ஊழியர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !