பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோயிலில் சூரசம்ஹாரம்
ADDED :1172 days ago
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமம் ஆதி சக்தி ராஜராஜேஸ்வரி கோயிலில் 13 ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவ விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் கோயிலில் இருந்து முளைப்பாரிகள் புறப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. தொடர்ந்து சிறுமிகள் சப்த கன்னிகளாக சென்றனர். கார்த்திக் சுவாமிகள் வேத பாராயணம் ஓதினார். சக்தி பீட நிறுவனர் விஜயேந்திர சுவாமிகள் முன்னிலையில் மகிஷாசுரவதம் நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பெருங்கரை கிராம மக்கள் பக்தர்கள் திருடர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.