உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 10ம் திருவிழாவான நேற்று சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை நடந்தது. நள்ளிரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது உற்சவ அம்பாள் சிலையை ஆராட்டு மண்டபத்தில் வைத்து
மஞ்சள்பொடி அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவே சித்த நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !