உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊஞ்சல் அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலிப்பு

ஊஞ்சல் அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலிப்பு

விழுப்புரம் : அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பதினோறாம் மற்றும் நிறைவு நாள் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திரு ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. "லாலி செளடாம்ப லாலி, லாவண்யா ஜலராசி கெளரி லாலி"மற்றும் ஸ்ரீ‌ லீலா கிரிபலா சிதமெளலி பலா என்ற தெலுங்கு பாடல்கள் இசையுடன்பாடி சிறப்பு அர்ச்சனை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது கொலு வழிபாடும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வை கோயில் அறக் கட்டளையினர் மற்றும் பெளர்ணமி அமாவாசை குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !