செஞ்சி சுந்தரவிநாயகர் கோவில் துர்கைக்கு திருவிளக்கு பூஜை
ADDED :1169 days ago
செஞ்சி: செஞ்சி சுந்தரவிநாயகர் கோவில் துர்கா பரமேஸ்வரிக்கு விஜயதசமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் உள்ள துர்காபரமேஸ்வரிக்கு நவராத்திரி விழா கடந்த 26ம் தேதி துவங்கி நடந்து வந்தது. தினமும் சுந்தரவிநாயகர், முருகர், சிவலிங்கம், துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். கொலு அமைத்து தினமும் சிறப்பு வழிபாடு நடந்தது. விஜயதசமியன்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தீபமேற்றி 1008 அம்மன் துதிபாடி அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். இதில் விழா குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.