செஞ்சி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1099 days ago
செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் விஜயதசமி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 8.30 மணிக்கு மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் பக்தி பாடல்களை பாடி தீபமேற்றி வழிபட்டனர். இதில் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.