உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜர் பெருமானுக்கு மகா அபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜர் பெருமானுக்கு மகா அபிஷேகம்

திருவண்ணாமலை : புரட்டாசி  மாத சதுர்ததசி திதி முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நடராஜர்  பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இன்று சனிக்கிழமை 8 தேதி நடராஜர் பெருமானுக்கு மகா அபிஷேக நடந்தது. மகாபிஷேகத்தையொட்டி நடராஜர்  பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !