உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி 3 ம் சனிக்கிழமை பெரியகுளம் கோயிலில் கோலாகலம்

புரட்டாசி 3 ம் சனிக்கிழமை பெரியகுளம் கோயிலில் கோலாகலம்

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ம் வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரமும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஐஸ்வர்ய அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரியகுளம் தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர், குருவாயூரப்பன் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயர் செந்தூரம் அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாசலபதி காட்சியளித்தார். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !