உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி கோயிலில் உள்கட்டமைப்பு வசதி!

திருப்புல்லாணி கோயிலில் உள்கட்டமைப்பு வசதி!

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகன்நாதர் கோயிலில், 68 லட்ச ரூபாயில், உள்கட்டமைப்பு பணிகள் துவங்கி உள்ளது. இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது: திருப்புல்லாண ஆதி ஜெகன்நாதகர் கோயிலில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 68 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில் கோயில் முன் பகுதியில், பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக, "ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, தெற்கு பகுதியிலும் இக்கற்கள் பதிக்கப்படும்.மேலும், கோயில் குளத்திற்கு சுற்றுச்சுவர், கோயில் எதிரே பூங்கா, மற்றும் திருப்புல்லாணி முருகன் கோயிலில் இருந்து ஒன்றிய அலுவலகம் வரை, சேதமடைந்த தார் சாலை, புதுப்பிக்கப்பட உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !