சாம்பவர்வடகரை கோயிலில் திருப்பணிகள் துவக்கம்
ADDED :4858 days ago
கடையநல்லூர்: சாம்பவர்வடகரை ராமசாமி கோயிலில் புணருத்தாரண திருப்பணி நேற்று துவங்கியது.கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரையில் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோயில் அமைந்துள்ளது. சாம்பவர்வடகரை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்களால் பிரசித்தி பெற்று விளங்கும் ராமசாமி கோயிலில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமசாமி கோயிலில் புணருத்தாரண திருப்பணி மேற்கொள்ள இந்து நாடார் உறவின் முறையினர் ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் நேற்று காலை புணருத்தாரண திருப்பணி துவக்க விழா நடந்தது. சுவாமிகளுக்கு விசேஷ பூஜைகள், திருப்பணி பூஜைகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.