வாழவந்த அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா
ADDED :1096 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் வாழவந்த அம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல்,களரி விழா முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புபூஜைகள் நடந்து வந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக முருகன் கோயில் முன்பு பருவமழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடலில் சில்லாக்குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு மூலவரான வாழவந்த அம்மனுக்கு மஞ்சள்,பால், சந்தனம், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது.கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.