உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி கடைசி சனி : யோகநரசிங்க பெருமாள் கோயிலில் யாகவேள்வி

புரட்டாசி கடைசி சனி : யோகநரசிங்க பெருமாள் கோயிலில் யாகவேள்வி

உத்தமபாளையம்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோயிலில் யாகம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அன்னதானம் ஒம் நமோ நாராயணா பக்த சபையினரால் நடத்தப்பட்டது.

புரட்டாசி மாதம் நான்காவது வாரத்தை முன்னிட்டு உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயிலில் அதிகாலை முதல் யாக வேள்விகள் நடைபெற்றது. தொடர்ந்து சீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் 10.30 மணியளவில் ஒம் நமோ நாராயணா பக்த சபை சார்பில் கோயில் வளாகத்தில் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் ஹரஹர அய்யப்பன், செயலாளர் ரவி, நிர்வாக குழு உறுப்பினர்கள் பரசுராமன், அசோக், ஞானவேல், பாலசமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். கம்பம் கம்ப ராயப்பெருமாள் கோயில், சின்னமனூர் லெட்சுமிநாராயணா பெருமாள் கோயில், கோம்பை ரெங்கநாதர் கோயில்களிலும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !