உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணம்: அக்.25 ல் திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் நடை அடைப்பு

சூரிய கிரகணம்: அக்.25 ல் திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் நடை அடைப்பு

திருப்புத்தூர்: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்புத்தூர் திருத்தளி நாதர் கோயில் மதியம் கூடுதல் நேரம் நடை சாத்தப்படுகிறது.

சூரிய கிரகணம் அக்.25 ல் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறு நாள் மாலையில் நடைபெறுகிறது. இதனையடுத்து மதியத்திற்கு மேல் பல கோயில்களில் நடை சாத்தப்படும். திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் காலை 11:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 6:30 மணிக்கு நடைபெறும். பின்னர் இரவு 7:00 மணிக்கு கந்தசஷ்டி விழா துவக்கத்தை முன்னிட்டு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !