கண்ணங்குடி சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
புவனகிரி: கீரப்பாளையம் அருகே கண்ணங்குடியில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அருகே கண்ணங்குடியில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கோவில் உள்ளது. இக்கோவில் சுப்பரமணியன்பிள்ளை, சீனுவாசன் பிள்ளை, சிவக்குமார் பிள்ளை உள்ளிட்ட விழாக்குழுனர் அமைத்து கோவில் புரணமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதற்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19ம் தேதி ஸ்ரீஅனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. இரு தினங்கள் பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை பல்வேறு பூஜைகளுக்குப் பின் இரண்டாம் யாகசாலை பூஜைகளுக்குப் பின் கடம் புறப்பாடு துவங்கி கோவிலை வலம் வந்தனர். பின்னர் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 48 நாட்கள் மண்ட அபிஷேகம் நடக்கிறது.