உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளையில் கும்பாபிஷேகம்

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளையில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் மற்றும் வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலின் உள்ளே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரகட்டளை உள்ளது. கோயிலில் திருப்பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, மகா பூர்ணாகுதி மற்றும் மகாதீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்து அங்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !