அகரம் கோவில் உண்டியல் எண்ணிக்கை தள்ளிவைப்பு
தாடிக்கொம்பு: அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா அக். 9 அன்று சுவாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அக்.17 ல் கண் திறப்பு நிகழ்ச்சியும், அக். 18 ல் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது.
அகரம், தாடிக்கொம்பு உள்ளிட்ட சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் பூஞ்சோலைக்குச் சென்றதைத் தொடர்ந்து, அடுத்த மூன்றாவது நாள் (21.10.22) உண்டியல் எண்ணுவது வழக்கம். இது குறித்து கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் சு.ம.மாரிமுத்துவிடம் கேட்டபோது: கோவில் விழா சிறப்பாக முடிந்த நிலையில் அக்.21ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட வேண்டும். ஆனால் அறநிலையத்துறை உதவி இயக்குனர் (ஏசி.,) அன்று வர முடியாததால், தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வருகிற 26.10.2022 அன்று, உண்டியல் காணிக்கை எண்ணப்படும் என்றார்.