உள்ளூர் செய்திகள்

நல்ல குணம்


வழக்கமாக வரும் சிட்டுக்குருவி இன்று வருமா என காத்திருந்தார் தோட்டக்காரர். அவரது தோட்டத்தில்  தானியங்கள் ஏராளமாக இருந்தாலும் அவற்றை தின்பதற்கு பறவைகள் வரும். அவைகளில் சிட்டுக்குருவியை மட்டும் விரட்டி விட அவருக்கு மனம் வரவில்லை. ஏனெனில் அது ஆறு தானியங்களை மட்டும் தினந்தோறும் எடுத்துச் செல்வது வியப்பாக இருந்தது.
அன்று வந்த குருவியிடம் ‘‘ஆறு தானியங்களை மட்டும் ஏன் எடுத்துச் செல்கிறாய்’’ எனக் கேட்டார்.
ஒ அதுவா‘‘முதல் இரண்டு எனக்கும்,என்கணவருக்கும், அடுத்த இரண்டு என் குஞ்சுகளுக்கும், மீதமுள்ளது பக்கத்து கூட்டில் உள்ள வயதான தாத்தா,பாட்டிக்கு கொடுப்பேன் என்றது. அவர்கள் காத்திருப்பார்கள் நேரமாச்சு. சரி வருகிறேன்’’ என சொல்லிச் பறந்தது குருவி.  
குருவியிடம் இருக்கும் நல்ல குணம் கூட நம்மிடம் இல்லையே என வருத்தப்பட்டார். ஊரில் பெற்றோர்கள் தனியாக இருப்பது அவரது நினைவுக்கு வந்தது. அவர்களை அழைத்து வரப்புறப்பட்டார் தோட்டக்காரர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !