அள்ளித் தரும் வெள்ளி
ADDED :1186 days ago
முருகனுக்குரிய கிழமைகள் செவ்வாய், வெள்ளி. இதில் வெள்ளியன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் செல்வம், வெற்றி, உடல்நலம் பெருகும். ஐப்பசிமாதம் முதல் வெள்ளிக் கிழமையில் தொடங்கி வாரந்தோறும் மூன்று ஆண்டுகள் விரதம் இருக்க வேண்டும். ‘கந்த சுக்கிர வார விரதம்’ என இதைக் குறிப்பிடுவர். வெள்ளியன்று முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். காலையில் சாப்பிடாமலும் மதியம் ஒருவேளை உணவும், இரவு பால், பழம் சாப்பிட்டும் விரதத்தை முடிக்க வேண்டும். ‘ஓம் சரவணபவ’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். கந்தசஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குருகவசம் பாடல்களைப் பாடுவது அவசியம். பார்க்கவ முனிவரின் ஆலோசனைப்படி மூன்றாண்டு (156 வெள்ளிக் கிழமைகள்) விரதமிருந்த பகீரதன்(பூமிக்கு கங்கையை வரவழைத்தவர்) இழந்த தன் செல்வத்தை மீட்டார்.