தந்தையின் பேச்சை கேளுங்கள்
ADDED :1088 days ago
ஒருநாள் டேவிட் தன் அப்பாவுடன் சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பிடித்த கோட்டை அணிந்து இருந்ததால், கையை கோட் பைக்குள் விட்டு ஸ்டைலாக நடந்தான்.
‘‘மகனே... மழை பெய்துள்ளதால் எங்கும் சகதியாக இருக்கிறது. கவனமாக நடந்து வா! என் கையை பிடித்துக் கொள்’’ என்றார். அவனோ அதை காதில் வாங்கவில்லை.
திடீரென சகதியில் தடுமாறி விழுந்தான். முழங்காலில் அடிபட்டது. தந்தையின் பேச்சை கேட்காததால் வந்த விளைவு என வருத்தப்பட்டான்.