உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணத்தன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நடையடைப்பு

சூரிய கிரகணத்தன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நடையடைப்பு

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 25ம் தேதி, பகல், 1:00 மணிக்கு, சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் விமலா கூறுகையில்," வரும், 25ம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று, சூரிய கிரகணம், மாலை, 5:14 மணி முதல் மாலை 5:42 மணி வரை நிகழ உள்ளதால், அன்று பகல், 1:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப்படும். அதன்பின் மாலை, சூரிய கிரகணத்திற்குண்டான சுத்த புண்யவாசனை முடிந்த பின், மாலை, 6:30 மணிக்கு மேல், கோவில் நடை திறக்கப்படும்,"என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !