சூரிய கிரகணம்: அக்.25ல் பண்ணாரி கோவில் நடை அடைப்பு
ADDED :1086 days ago
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற கோவில் பண்ணாரி.இக்கோவிலுக்கு தமிழக,கர்நாடக,பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை, பௌர்ணமி, மற்றும் விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கோவிலில் வரும் அக்.25ல் சூரிய கிரகணத்தையொட்டி அன்று காலை 6மணி முதல் பிற்பகல் 2மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2மணிமுதல் மாலை 7மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது.சூரிய கிரகணம் முடிந்த பின்பு கோவில் சுத்தப்படுத்தப்பட்டு இரவு 7.30மணிக்கு சாயரட்சை பூஜை,8.30க்கு அர்த்த ஜாம பூஜையும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.