உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு

சதுரகிரியில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷத்தை வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சதுரகிரி கோயில் வனப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தற்போது ஓடைகளில் நீர்வரத்து காணப்படுகிறது. இதனால் சுவாமிதரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இருந்தபோதிலும் நேற்று மிக குறைந்த அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். வனத்துறை அனுமதிக்காததால் தாணிப்பாறை கேட் முன்பு, சூடம் ஏற்றி கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோயிலில் மாலை 04:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு , சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !