காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED :1126 days ago
கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கால சந்தி பூஜை திருப்பல்லாண்டு சாற்று முறை சேவிக்கப்பட்டது. மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் 4 ரத வீதிகளில் திருவீதி வலம் வந்து அருள்பாலித்தார்.